Get me outta here!

தெரியுமா உனக்கு??

தினம் தினம்
உன்னை தூக்குவதால்
கிறுக்கு பிடித்து
சுற்றும்
பூமியின் காதல்
தெரியுமா உனக்கு??.....

உன் கடைக்கண் பார்வை
விழாததால்
பிறரையும் சுட்டு
கடலில் விழுந்து
தற்கொலை செய்யும்
சூரியனின் காதல்
தெரியுமா உனக்கு??..........

இரவு வேளையில்
உன்னை காணாமல்
சோகத்தில் தேயும்
சந்திரனின் காதல்
தெரியுமா உனக்கு??..........

தான் தொட
முடியாமல் போனாலும்
தன் கண்நீரேனும்
உன்னை தொடட்டும் என
மழை சிந்தும்
மேகத்தின் காதல்
தெரியுமா உனக்கு??.....

உன் கண்பார்த்து
உண்மை கதைக்க
தைரியம் இல்லாமல்
மறைந்து கொண்டு
காதில் கிசுகிசுக்கும்
தென்றலின் காதல்,
கேட்குமா உனக்கு??.....

உன் மேனி முழுவதும்
பயணம் செய்ய
சேரில் சேரவும்
தயாராய் இருக்கும்
உன் குளியலறை
நீர்த்துளிகளின் காதல்
தெரியுமா உனக்கு??.....

தென்றல் அவன்
தொடாமல் தொட்ட
பாகங்கள் எல்லாம்
நீ தெரிந்தே
தொட வைப்பதால்
மோட்சத்தில் மிதக்கும்
உன் சோப்பு கட்டியின் காதல்
தெரியுமா உனக்கு??

வித விதமாய்
சொல்லிய
இத்தனை காதலும்
தெரியா உனக்கு
என்ன சொல்லி
புரிய வைப்பேன்
என் காதலை
என்ற
என் தவிப்பாவது
தெரியுமா உனக்கு??

3 comments: