Get me outta here!

ஒரு பொறியாளனின் கவிதை..

kathalkavithai kavithai kavithaigal tamil poems

கருகி இறக்கிறது 
அனுதினமும் 
என் தோட்டத்தில்
ரசிக்கப்படாத  
ஒரு ரோஜா...... 
 
விளையாட ஆளின்றி   
அழுது அழுது 
தூங்கி விடுகிறது 
என் எதிர் வீட்டில் 
ஒரு குழந்தை......
 
சொட்டு சொட்டாய்  
விழுந்து விடுகின்றன 
சாக்கடையில்
என் வீடு வந்த 
மழை துளிகள்... 
 
பாராட்டுக்கள் ஏதுமின்றி 
புதைந்து விடுகின்றன
புத்தகத்தில் 
என் தங்கை வரைந்த
ரங்கோலிகள்...... 
 
இவையேதும் அறியாமல்  
வேலை, வேட்கை என்று  
சுழண்டு கொண்டிருக்கும் 
நான் 
இறந்தும் போவேன் 
ஒரு நாள்
இறந்து விட்டேன் 
என்பது கூட தெரியாமல்!!!!

13 comments:

  1. //இவையேதும் அறியாமல்...
    ஒரு நாள்
    இறந்தும் போவேன்

    இறந்து விட்டேன்
    என்பது கூட தெரியாமல்!!!!//

    கிரண்,

    மனிதன் இயந்திரமாகி வரும் வாழ்வை உணர்த்தும் வரிகள்!

    (சொல் சரி பார்ப்பை அகற்றி விடுங்கள். பின்னூட்டமிடும் நேர அளவை மிச்சப்படுத்தலாம்.)
    நன்று.

    ReplyDelete
  2. மனிதனின் இயந்திர வாழக்கையை மனம் வலிக்க எழுதி இருக்கிறீர்கள்.....
    உண்மை என்றோ புரிந்தாலும் இதை படிக்கும் போது இதயம் இன்னும் வலிக்கிறது. நன்றாக உள்ளது..... keep writing.......... all the best.....

    ReplyDelete
  3. கவிதையுடன் பிறக்கவில்லை... இறக்க விரும்புகிறேன் கவிதையாக.. என்னை ரசித்து திகைக்க வைத்த வரிகள் இவை.... மிக மிக அருமை.....

    ReplyDelete
  4. Dae poems are really good..great talent inside you..keep it up... :-)

    ReplyDelete
  5. நன்று நண்பா...தொடர்ந்து எழுதுங்கள்...பார்க்க,ரசிக்க நாம் தயார்!!

    ReplyDelete
  6. namma life pathi ezhuthi irukka. anyways excellent one.

    ReplyDelete
  7. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. @சத்ரியன்: ரொம்ப நன்றி நண்பரே... அப்படியே செய்கிறேன்...

    ReplyDelete
  9. @கவிதா: பாராட்டுக்கு நன்றி ... சிலர் கவிதையுடன் பிறக்கிறார்கள் பெயரில்... உங்களை போல்:)

    ReplyDelete
  10. @பாலாஜி: Thanks da.. Continue reading my posts...

    ReplyDelete
  11. @மைந்தன் சிவா: நன்றி நண்பா. உங்கள் ஆதரவுதான் எனக்கு Boost!!!

    ReplyDelete
  12. @Kalyan: Ya. sourced from our grim reality. thanks for your support!!

    ReplyDelete
  13. @dhosai: நன்றி நண்பா!!!

    ReplyDelete