Get me outta here!

ஒரு பொறியாளனின் கவிதை..

கருகி இறக்கிறது  அனுதினமும்  என் தோட்டத்தில் ரசிக்கப்படாத   ஒரு ரோஜா......    விளையாட ஆளின்றி    அழுது அழுது  தூங்கி விடுகிறது  என் எதிர் வீட்டில்  ஒரு குழந்தை......   சொட்டு சொட்டாய்   விழுந்து விடுகின்றன  சாக்கடையில் என் வீடு...

ஏக்கம்

குழந்தைகள் ஏக்கம் பெரிதாய் வளர்ந்திட... வளர்ந்தவர் ஏக்கம்  குழந்தையாய் தொடர்ந்திருக்க!!...

குப்பை

 அழுக்கு குப்பைகள்  அவன் பையில்.... அழகான அவன் கனவுகள் குப்பையில்!!...

விதவை

சில மரணம் விதவை... சில மரணம் மறு திருமணம்....

அஹிம்சை

அஹிம்சையை  போதித்தவர்  நேதாஜி இல்லை  காந்திஜி என்று  அவனை அடித்து  திருத்தினார் ஆசிரியர்!!!...

கண்ணீர்

நேற்று இறந்த  மலர்களுக்கு  இன்று பிறக்கும்  மொட்டுக்கள்  சிந்தும் கண்ணீர்...  பனித்துளி!...

அயோத்தி...

அகிலம் காக்ககடவுள்...ஆலயம் காக்ககாவலன்!!...