Get me outta here!
Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

காத்திருப்பு

 சாலை சந்திப்பு 
kathalkavithai kavithai kavithaigalசிக்னல்களில் சிக்கி ,
பரபரப்பான
வாகன நெரிசலில் 
காத்திருக்கும் 
அந்த தருணங்களில்...

பூகோளம் பிடிக்காத 
உங்களுக்கு...
விற்பனைக்கு வரும் 
அந்த
உலக உருண்டைகள் 
தேவைப்  படாமல் 
போகலாம்!!!!

Earphone இசையில் 
மூழ்கியிருக்கும் 
உங்களுக்கு..... 
அந்த 
வலுவிழந்த வயதானவரின் 
எச்சில் மறந்த  
பிச்சைக்  குரல் 
கேட்காமல் போகலாம்...

தமிழ் படிக்கத்  
தெரியாத 
உங்களை.....  
தலைப்புச்  செய்திகள் 
பாடி வரும்
அந்த 
நாளிதழ் முகங்கள்
ஈர்க்காமல் போகலாம் ....

எப்போதும் ஆணாய்
எப்போதும் பெண்ணாய்
வாழும் 
உங்களுக்கு.... 
அருவருப்பாய் 
அந்த 
அரவாணியின் அபலம் 
கடந்து போகலாம்..

ஏதேதோ எண்ணங்களில் 
சிக்கி தவிக்கும் 
உங்களுக்கு.. 
வாகனங்களை  கொஞ்சமாகவும்  
கண்களை மிகுதியாகவும்  
துடைக்கும்  
அந்த சிறுவனும்
அவன் கண்ணீரும் 
தெரியாமல் போகலாம்....



எதுவும் கொடுக்காமல் 
எதுவும் வாங்காமல் 
எதுவும் கவனிக்காமல் 
பயணங்களை 
நீங்கள் தொடர்வீர்கள்
உங்கள் 
சிகப்பு பச்சையாய் 
மாறியவுடன்....

அவர்கள்
பயணிக்காமல் 
காத்துக் கொண்டே 
இருப்பார்கள்  
வேறொருவரின் 
பச்சை சிகப்பாய் 
மாறும் வரை!!!

ஒரு முறை!!!


kathalkavithai kavithai kavithaigal tamil poemsதோற்றுப்  பாருங்கள்
ஒருமுறை
சந்தோசமாய்...
வெற்றிகள் வித்தியாசமாய்
தெரியாது!!!

கோபித்துப் பாருங்கள்   
ஒருமுறை 
உங்களை.... 
பிறர் குற்றங்கள் வித்தியாசமாய் 
தெரியாது!!!

சிரித்துப் பாருங்கள்
ஒருமுறை..
துக்கத்தில்.
வலிகள் வித்தியாசமாய் 
தெரியாது...


நேசித்து பாருங்கள்
ஒருமுறை
யோசிக்காமல்....
கடவுளுக்கும் மனிதனுக்கும் 
வித்தியாசமே தெரியாது!!!

யார் அழுவார் ??

kathalkavithai kavithai kavithaigal tamil poems
நல்லது செய்தேனோ..
கெட்டது செய்தேனோ ..
என் நலம் வாழ 
என்னென்ன செய்தேனோ??
ஞாபகம் இல்லை...
நான் இறந்தால் 
யார் அழுவார் 
தெரியவில்லை...
மனித மனம் 
புரிந்து கொள்ள 
தனியாய் ஒரு 
கலை இல்லை!!!
என் மறைவை 
நினைவில் கொள்ள... 
எனக்காய் கண்ணீர் சிந்த..
கொடுத்து விட்டேன் 
என் கண்களை 
தானமாக!!!!

ஒரு பொறியாளனின் கவிதை..

kathalkavithai kavithai kavithaigal tamil poems

கருகி இறக்கிறது 
அனுதினமும் 
என் தோட்டத்தில்
ரசிக்கப்படாத  
ஒரு ரோஜா...... 
 
விளையாட ஆளின்றி   
அழுது அழுது 
தூங்கி விடுகிறது 
என் எதிர் வீட்டில் 
ஒரு குழந்தை......
 
சொட்டு சொட்டாய்  
விழுந்து விடுகின்றன 
சாக்கடையில்
என் வீடு வந்த 
மழை துளிகள்... 
 
பாராட்டுக்கள் ஏதுமின்றி 
புதைந்து விடுகின்றன
புத்தகத்தில் 
என் தங்கை வரைந்த
ரங்கோலிகள்...... 
 
இவையேதும் அறியாமல்  
வேலை, வேட்கை என்று  
சுழண்டு கொண்டிருக்கும் 
நான் 
இறந்தும் போவேன் 
ஒரு நாள்
இறந்து விட்டேன் 
என்பது கூட தெரியாமல்!!!!

கண்ணீர்

நேற்று இறந்த 
மலர்களுக்கு 
இன்று பிறக்கும் 
மொட்டுக்கள் 
சிந்தும் கண்ணீர்... 
பனித்துளி!!