
பரபரப்பான
வாகன நெரிசலில்
காத்திருக்கும்
அந்த தருணங்களில்...
பூகோளம் பிடிக்காத
உங்களுக்கு...
விற்பனைக்கு வரும்
அந்த
உலக உருண்டைகள்
உலக உருண்டைகள்
தேவைப் படாமல்
போகலாம்!!!!
Earphone இசையில்
மூழ்கியிருக்கும்
உங்களுக்கு.....
அந்த
வலுவிழந்த வயதானவரின்
எச்சில் மறந்த
பிச்சைக் குரல்
கேட்காமல் போகலாம்...
தமிழ் படிக்கத்
தெரியாத
உங்களை.....
தலைப்புச் செய்திகள்
பாடி வரும்
அந்த
நாளிதழ் முகங்கள்
ஈர்க்காமல் போகலாம் ....
ஈர்க்காமல் போகலாம் ....
எப்போதும் ஆணாய்
எப்போதும் பெண்ணாய்
வாழும்
உங்களுக்கு....
அருவருப்பாய்
அந்த
அரவாணியின் அபலம்
கடந்து போகலாம்..
ஏதேதோ எண்ணங்களில்
சிக்கி தவிக்கும்
உங்களுக்கு..
வாகனங்களை கொஞ்சமாகவும்
கண்களை மிகுதியாகவும்
துடைக்கும்
அந்த சிறுவனும்
அவன் கண்ணீரும்
தெரியாமல் போகலாம்....
எதுவும் கொடுக்காமல்
எதுவும் வாங்காமல்
எதுவும் கவனிக்காமல்
பயணங்களை
நீங்கள் தொடர்வீர்கள்
உங்கள்
சிகப்பு பச்சையாய்
மாறியவுடன்....
அவர்கள்
பயணிக்காமல்
காத்துக் கொண்டே
இருப்பார்கள்
வேறொருவரின்
பச்சை சிகப்பாய்
மாறும் வரை!!!
உங்க template ரொம்ப நல்ல இருக்கு..
ReplyDeleteகவிதை : சிக்னலில் ரொம்ப பட்டிருப்பீர்கள் போலிருக்கிறதே
மிகவும் சிறப்பானதொரு கவிதை. அருமையாக இருக்கிறது. அந்த கடைசிப் பாரா இல்லாவிடில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கணிப்பு. அருமை. நிறைய எழுது நண்பா இது போல.
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteஎனக்கென்னவோ கவிதையின் உயிரே
கடைசிப் பாராவில்தான் நிறைந்திருப்பதுபோல் படுகிறது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
@Ramani: உங்கள் வருகைக்கும்.. ஊக்குவிக்கும் பதிவுக்கும் நன்றி!!!
ReplyDelete@Karthi:நண்பா மிக்க நன்றி... தொடர்ந்து ஆதரவு கொடு!!!
ReplyDeleteமனோவி:நன்றி உங்கள் முதல் வருகைக்கு... என்ன பண்றது.. நாம் படுவதை பாடுவது கவிதை ஆகி விடுகிறது!!!
ReplyDeleteas usual rocking one kiran. touchingavum irunthuthu. good job. keep them coming
ReplyDeleteThanks Kalyan... Ur support keeps me going!!!
ReplyDeleteNice and Touching!! keep it up....
ReplyDeleteமாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிற அருமையானக் கவிதை!! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteGood one Kiran.... u forgot to mention about traffic police?????? :-)
ReplyDelete@Vignesh: Thanks a lot!!
ReplyDelete@"நந்தலாலா இணைய இதழ்" : உங்கள் பாராட்டுக்கள் ஊக்கம் அளிக்கின்றன. மிக்க நன்றி!!
ReplyDelete@Sreekanth: Thanks boss... Signal la irukkara ellara pathiyum eluthunaa lengthaa pogathu??
ReplyDeleteபல நிகழ்வுகளின் யதார்த்த நிழல் சூழ்ந்ததொரு அருமையான கவிதைப்பதிவு. பாராட்டுக்கள்
ReplyDeleteIt was sad.. and yet beautiful. Your words paint such pictures! Those which was already enhanced by that one photo that you have added. Wonderfully written da.. Kudos!
ReplyDeletewow it was so beautiful. lovely way with the words. and deep sentiments too!
ReplyDeleteமிகவும் நன்றாக இருந்தது. மனதை தொட்டு சென்றது.ஒரு விதமான வலியை விட்டு சென்றது ! :)