Get me outta here!

மறக்க!!

உலகை மறக்க
தேவை இல்லை
காதல் வசமோ
பிராந்தி பாட்டிலோ
என்னிடம் இருக்கிறதே
சுமாரான ஒரு ஹெட் போனும்
அற்புதமான ரஹ்மான் இசையும்!!!!

என் விடை!!

கை கோர்த்து விரல் வருடிய
அந்த மாலை வேளையில்
"என்னை எவ்வளவு பிடிக்கும்??"
முதலொன்று கேட்டாய் ...
"தெரியாது" என்றேன்..
சிறிதாய் அதிர்ந்தாய்...
"சொன்னால் தெரியாது??" என்றேன்..
சிறு புன்னகை இட்டாய்...
"ஆயுளெல்லாம் அருகிலே இருப்பாயா??"
பிரிதொன்று கேட்டாய்...
"முடியாது " என்றேன்..
கொஞ்சம் கோபித்தாய்...
"உன் அருகில் இருந்தால் ஆயுள் முடியாது" என்றேன்..
செல்லமாய் சிணுங்கினாய்...
"எனக்காக உன் உயிரை தருவாயா??"
உரிமையாய் கேட்டாய்...
"இறந்தால் தானே தருவேன்", என்றேன்...
கண்ணீர் விட்டாய்
குழந்தை போல் ..
"வார்த்தை பிழையாயிற்று!!
என்னிடம் இருந்தால் தானே தருவேன்!!", என்றேன்..
கண் துடைத்து
சிரித்தாய் சிறிதாய்...
"என்னை எவ்வளவு பிடிக்கும்????"  மறுபடியும் கேட்டாய்..

உதடு பிரித்து
உதடு சேர்த்தேன்...
எழுத முடியவில்லை
கொடுத்ததை போல்
கத்சிதமாய் !!!